• Sep 25 2023

நடிகர் விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு இது தான் காரணமா?- அவரே கூறிய தகவல்

stella / 1 week ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வருபவர் விஷால். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, சுனில், செல்வராகவன், ரிது வர்மா என பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில் இதுவரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை மனம் திறந்து பேசி உள்ளார். அதில், திருமணம் என்பது சாதாரணமான விஷயம் இல்லை. அதற்கு புரிதல்,பக்குவம் வேண்டும். திடீரென ஒரு முடிவு எடுத்துவிட்டு பின், என்னடா இப்படி ஆகிவிட்டதே என்று யோசிக்கக்கூடாது. 


ஏன் என்றால் திருமணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்மந்தப்பட்டது. அது மட்டுமில்லாமல் ஒரு நடிகராக எனக்கு நிறைய பொருப்பு இருக்கிறது. அந்த விஷயம் எல்லாம் முடிந்து, என் வாழ்க்கையிலும் திருமணம் நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தால், அது என் வாழ்க்கையில் நிச்சயமாக நடக்கும்.

19 ஆண்டு காலமாக மக்கள் என்னை ஒரு நடிகனாக மாற்றி இந்த உயரத்தில் அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நிச்சயமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும், முதியோர் இல்லத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறேன். அதன் பிறகு தான் மற்ற இடத்திற்கு செல்வேன்.


மேலும், பசியோடு இருப்பவர்களுக்கு வயிறு நிறைய சோறு போட்டு அனுப்ப வேண்டும் என்பதை,நான், விஜயகாந்த் அவர்களிடம் கற்றுக்கொண்டேன். அவருடைய அலுவலகத்தில் எப்போதும் சமைத்துக்கொண்டே இருப்பார்கள், யார் போனாலும் வயிறார சாப்பாடு கிடைக்கும் அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னால் முடிந்ததை நான் செய்வேன் என்று விஷால் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement