• Oct 03 2025

பாஜகவின் மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம் ....! வெளியான பட்டியல் விபரம்....!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் பாஜக புதிய மாநில நிர்வாகிகளை இன்று அறிவித்துள்ளது. இதில் முக்கியமாக, நடிகை மற்றும் கட்சியின் தீவிர பிரச்சாரங்களில்  செயல்பட்டு வரும் குஷ்பு சுந்தர், மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மொத்தம் 14 பேர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் குஷ்பு முக்கிய இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே இந்தப் பொறுப்பில் இருந்த வி.பி. துரைசாமி, சக்கரவர்த்தி மற்றும் கரு நாகராஜன் உள்ளிட்டோர் மீண்டும் அதே பொறுப்புகளில் நீடிக்கின்றனர்.


அதேபோல், மாநில பொதுச்செயலாளர்களாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பொன் பாலகணபதி, பேராசிரியர் ராமசீனிவாசன், முருகானந்தம், கார்த்திகாணி மற்றும் ஏ.பி. முருகானந்தம் இடம் பெற்றுள்ளனர். மாநில செயலாளர்களாக 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement