அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த திரைப்படம் தான் டிமாண்டி காலனி 2. இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி விக்ரம் நடித்த தங்கலான் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா ஆகிய படங்களுடன் ரிலீசானது.
கடந்த 2015 ஆம் ஆண்டு டிமான்டி காலனி படத்தின் முதலாவது பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து இந்த வருடம் ரிலீசானது.
தங்கலான் படத்திற்கு அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக டிமாண்டி காலனி 2 திரைப்படம் காணப்படுகிறது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், பிக் பாஸ் அர்ச்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.
தமிழ் சினிமாவில் பேய் படத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகிறது. அதேபோல டிமான்டி காலனி 2 படமும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட படமாக காணப்படுகின்றது.
இந்த திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் மூன்று நாட்களில் சுமார் 10 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. மேலும் இந்த படத்திற்கு கிடைத்த ஆதரவால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்தவாறு காணப்பட்டது. இதனால் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அதிக வசூல் ஈட்டி உள்ளதால் படக் குழுவினர் நிறைந்த மகிழ்ச்சியில் காணப்படுகிறார்கள்.
இந்த நிலையில், தற்போது இதுவரையில் டிமாண்டி காலனி 2 திரைப்படம் சுமார் 55 கோடிகளுக்கு மேல் வசூலித்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த தகவல் வைரலாகி வருவதோடு ரசிகர்கள் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!