• Apr 17 2026

‘டிசி’ காதலர் தின ஸ்பெஷல்.. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட சிறப்பு க்ளிம்ப்ஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

காதலர் தினத்தை முன்னிட்டு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘டிசி’படத்தின் சிறப்பு க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். 

ஏற்கனவே வெளியான ப்ரோமோவில், லோகேஷ் ரத்தக்கறையுடன் நடந்து வருவது, வாமிகா கபி பாலியல் தொழிலாளியாக நடிப்பது ஆகிய காட்சிகள் படத்தின் தீவிரமான கதைக்களத்தை உணர்த்துகின்றன.

கடந்த காலங்களில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவந்த க்ளிம்ப்ஸ்கள் ரசிகர்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதை போல, ‘டிசி’ படத்தின் க்ளிம்ப்ஸ் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்படுகிறது. 


‘டிசி’ என்பது ‘தேவதாஸ் – சந்திரா’ (Devadas Chandra) என்பதன் சுருக்கம். தற்போது காதலர் தினத்தில் வெளியான ‘தேவதாஸ் – சந்திரா’வின் ரத்தம் தெறிக்கும் காதல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement