• May 18 2026

தர்ஷா குப்தா என்னங்க இப்படி மாறிட்டாங்களே.! லீக்கான போட்டோஷால் ஷாக்கில் ரசிகர்கள்

shali / 1 month ago

Advertisement

Listen News!

சீரியல் உலகின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தர்ஷா குப்தா. தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற அவர், பின்னர் வெள்ளித்திரையில் தனது பயணத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் சில படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும், தொடர்ந்து பெரிய அளவிலான வாய்ப்புகள் குறைந்த நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது பிரபலத்தைக் கூட்டினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தர்ஷா குப்தா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக, அவர் வெளியிட்டு வரும் ஸ்டைலிஷ் மற்றும் கவர்ச்சியான போட்டோஷூட்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டோவும் ரசிகர்களால் அதிகளவில் லைக் மற்றும் ஷேர் செய்யப்படுகிறது.


இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவர்ச்சியான தோற்றத்தில் அவர் காட்சியளித்துள்ளார். அவரது லுக், ஸ்டைல் மற்றும் கான்ஃபிடென்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து தனது ரசிகர்களுடன் இணைந்திருக்கும் தர்ஷா குப்தா, இப்படியான போட்டோஷூட்களின் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை மேலும் அதிகரித்து வருகிறார். தற்போது இந்த புகைப்படங்கள் இளசுகளின் மனதை கவர்ந்து டிரெண்டாகி வருகிறது.

Advertisement

Advertisement