• Sep 20 2024

அடடே… பல ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி; புகைப்படத்துடன் வெளியான அறிவிப்பு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் விஜே தியா மேனன்.

.கேரளாவை பூர்விகமாக கொண்டவர் தியா மேனன். இவர் படித்து வளர்ந்ததெல்லாம் கோவையில்தான். மேலும் சன் மியூஸிக் சேனலில் விஜேவாக கெரியரை தொடங்கிய தியா மேனன், கிரேஸி கண்மணி, சுட சுட சென்னை, கால் மேல காசு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இவரின் நிகழ்ச்சிக்கு என்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் கூற வேண்டும்.

சன் டிவி மற்றும் சூர்யா டிவியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவ்வாறு இருக்கையில் தியா மேனன் சிங்கப்பூரைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியன் என்வரை காதலித்து வந்தார்.

மேலும் கார்த்திக் சுப்பிரமணியன் சிங்கப்பூர் உள்ளூர் கிரிக்கெட் டீம்மில் விளையாடி வருகிறார்.மேலும் மூன்று ஆண்டுகள் காதலுக்கு பிறகு இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் தியா மேனன்.இந்நிலையில் திருமணம் ஆகி 6 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாகியுள்ளார் தியா.

தனது கணவருடன் பிரக்னன்ஸி போட்டோ ஷூட் நடத்தியுள்ள தியா, தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை கலக்கலாக அறிவித்துள்ளார். அத்தோடு தியாவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement