• May 19 2024

பாடகர் கேகே மரணத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்: பரபரப்புடன் வெளியான காரணங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத். எல்லோராலும் கே.கே என்று அழைக்கப்படுகின்றார். டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட அவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இந்தியாவின் பல மொழிப் படங்களில் எண்ணற்ற படல்களைப் பாடி பெயர்போனவர். இவர் நேற்று நள்ளிரவில் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கே.கே. டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர். மேலும் இவரின் குரல் பிடித்துப் போனதால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், காதல் தேசம் படத்தில் "கல்லூரிச் சாலை" மற்றும் "ஹலோ டாக்டர்" பாடல்களை பாடும் வாய்ப்பை வழங்கினார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழாவில் இசை நிகழ்ச்சிக்குப் பின்னர், அறைக்கு சென்ற கே. கே மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மேலும் இவருடைய திடீர் மறைவு பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது.

மேலும் கே கேயின் இறப்பை இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்தோடு அவரது முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவரது மரணத்திற்கு அரங்கத்தில் நிரம்பி வழிந்த கூட்டம் முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. மேலும் கேகே இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தில் மொத்தமாக 3 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் அவரது நிகழ்ச்சி நடைபெற்ற போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதாக கூறப்படுகின்றது.

மேலும் கட்டுக்கடங்காத கூட்டத்தை கலைப்பதற்காக தீயணைப்பான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரங்கத்தில் அதிக வெப்பம் நிலவியுள்ளது. இதனால் கேகே-வுக்கு அசௌகரியம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு இந்த அரங்கத்தில் ஏசி வேலை என்றும் கூறப்படுகிறது. கே கேவின் மரணம் தொடர்பாக இது போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement

Advertisement