• Aug 29 2025

மனுஷி’ படத்தை நீதிபதி பார்வையிட்ட பின்...!காட்சிகள் நீக்க நீதி மன்றம் உத்தரவு...!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

‘மனுஷி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்கள் சமுதாய அமைப்புகளைப் பழிச் சொல்லும் வகையில் இருப்பதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், படக்குழுவுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்தப் புகாரை பரிசீலனை செய்தபின், குறிப்பிட்ட காட்சிகளை உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டார்.


வழக்கறிஞர் பி. விஜயசேகரன் தாக்கல் செய்த மனுவில், ‘மனுஷி’ திரைப்படத்தில்  சமூகத்தையும், சமுதாய ஒழுக்கங்களை பற்றியும் தவறான, அவமதிக்கப்படும் விதத்தில் காட்சிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது சமுதாய அமைப்புகளுக்கு எதிரான துஷ்பிரசாரம் எனவும், மக்கள் மனதில் தவறான படம் வரைவதற்கான அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது.


நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கருத்து சுதந்திரம் என்பதற்கும் சமூக பொறுப்பும் சமநிலையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். சமூக ஒற்றுமையை பாதிக்கும் காட்சிகள் சினிமாவில் இடம் பெறக்கூடாது எனவும் அவர் கூறினார்.

இத்துடன், இந்தக் காட்சிகளை சென்சார் வாரியத்திடம் மீளாய்வுக்கு அனுப்பி, தேவையான மாற்றங்களைச் செய்த பிறகு மட்டுமே திரைப்படம் திரையிடப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement