• Jan 19 2025

தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு திடீரென நீதிமன்றம் போட்ட உத்தரவு.. சேர்த்து வைக்க முயற்சியா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சமீபத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த நிலையில் இருவரையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்துவிட்டனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில் இரண்டு ஆண்டுகள் அவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நல விரும்பிகள் முயற்சி செய்த போதிலும் இருவருமே மீண்டும் சேர்ந்து வாழ ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.



இந்த நிலையில் சட்டரீதியாக இருவரும் விவாகரத்து பெறுவதற்காக சமீபத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை அடுத்து இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் அக்டோபர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

இருவரையும் சேர்த்து வைக்க நீதிமன்றம் கடைசி முயற்சி செய்யும் என்றும் ஆனால் இருவரும் பிரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் விவாகரத்து அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement