• Jan 19 2025

வெங்கடேஷ் பட் பார்த்தால் வயிறு எரியும்.. பிரமாண்டமான செட்.. குக் வித் கோமாளி’ கிராண்ட் ஓபனிங் புரமோ..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் கிரான்ட் ஓப்பனிங் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவை பார்க்கும் போது கடந்த நான்கு சீசனை விட இந்த சீசன் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புரமோ வீடியோ ஆரம்பத்தில் மிகவும் ஆச்சரியத்தக்க வகையில் இதுவரை இல்லாத அளவில் செட் பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது தெரிய வருகிறது என்பதும் அதனை அடுத்து செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகிய இருவரும் என்ட்ரியாகும் காட்சியும் உள்ளன.



குறிப்பாக செஃப் தாமு வரும்போது ’நெருப்புடா’ என்ற பின்னணி பாடல் ஒலிப்பதை பார்க்கும்போது இந்த நிகழ்ச்சியின் பிரமாண்டத்தை காண முடிகிறது. அதேபோல் மாதம்பட்டி ரங்கராஜ் பைக்கில் அசத்தலாக உள்ளே என்ட்ரியாகும் காட்சி மாஸ் ஆக இருக்கிறது.

மொத்தத்தில் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே போனவர்கள் குறிப்பாக வெங்கடேஷ் பட் பார்த்து வயிறு எரியும் வகையில் இந்த நிகழ்ச்சி நிச்சயம் கடந்த நான்கு சீசனை விட சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் விடிவி கணேஷ், யூடியூபர் இர்ஃபான், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2   நடிகர் வசந்த், நடிகை ஷாலின் ஜோயா, நடிகை திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் குக்காக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சுனிதா, புகழ், ராமர், குரேஷி உள்ளிட்டோர் கோமாளிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

Advertisement

Advertisement