• Sep 20 2024

கொரோனா குமார் திரைப்படத்தை கைவிட முடிவெடுத்த படக்குழு- திடீரென வெளியாகிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தினை ஐசரி கணேஷ் தான் தயாரித்து வருகின்றார். இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது படமான கொரோனா குமார் என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்திலும் சிம்புவும் தான் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

இதனை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குநர் கோகுல் இயக்க உள்ளார். இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வந்ததாக சொல்லப்பட்டது. படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் பஹத் பாசிலும், மற்றொரு முக்கியமான வேடத்தில் நடிக்கை வைகைப்புயல் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது இந்த படம் கைவிடப்படுவதாக திடீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு பதிலாக சிம்பு நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement