• Sep 19 2024

சர்ச்சையில் சிக்கிய மோகன்லால்-கடைசியில் ரிலீஸுக்கு தடையா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள 'மான்ஸ்டர்' திரைப்படம் வரும் 21ம் தேதி  பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தை வைசாக் இயக்கிய நிலையில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.இவ்வாறுஇருக்கையில், சென்சார் பிரச்சினையால் மான்ஸ்டர் திரைப்படம் வெளியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.


அதாவது மோகன்லால்  முன்னதாக மோகன்லாலின் 12த் மேன், ப்ரோ டேடி ஆகிய படங்கள் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியிருந்தன. இவ்வாறுஇருக்கையில், வைசாக் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'மான்ஸ்டர்' வரும் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் இந்தப் படத்தை மலையாளத்தில் முதல் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த 'புலிமுருகன்' படத்தின் இயக்குநர் வைசாக் இயக்கியுள்ளார். அத்தோடு மோகன்லாலின் த்ரிஷ்யம், 12த் மேன் படங்களை தயாரித்த ஆண்டனி பெரும்பவூர், மான்ஸ்டர் படத்தையும் தயாரித்துள்ளார்.

மோகன்லாலுடன் சித்திக், மஞ்சு லட்சுமி, ஹனி ரோஸ், கணேஷ் குமார், லீனா, சுதேவ் நாயர் உள்ளிட்ட பலர் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளனர். அத்தோடு லக்கி சிங் என்ற கேரக்டரில் மோகன்லால் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்வெஸ்டிகேஷன் க்ரைம் திரில்லரில் உருவாகியுள்ள மான்ஸ்டர் படத்திற்கு மோகன்லால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. அத்தோடு இந்தப் படம் வெளியாகும் அதேநாளில் (அக் 21) நிவின் பாலி நடித்துள்ள 'படவேட்டு' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகின்றது.



இவ்வாறுஇருக்கையில், மான்ஸ்டர் திரைப்படம் வெளியாவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. இந்தப் படத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து சில காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அரபு நாடுகளில் மான்ஸ்டர் படம் வெளியாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

அங்குள்ள சென்சார் அமைப்பு இந்தப் படத்தை தடைசெய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். காரணம், கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலானோர் அரபு நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், மான்ஸ்டர் படத்திற்கு அரபு நாடுகளில் கிடைக்கும் வசூல் சுத்தமாக கிடைக்காது என படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.



மோகன்லால் படத்திற்கு அரபு நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால், படக்குழு அதிரடியாக முடிவெடுத்துள்ளனர். அதாவது சர்ச்சைக்குரிய தன்பாலின ஈர்ப்பாளர்கள் வரும் காட்சிகளை நீக்கிவிட்டு அரபு நாடுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆனாலும், குறுகிய காலத்தில் எடிட்டிங் செய்ய முடியாது என்பதால், இந்தியாவில் வெளியான பின்னர் ஓரிரு நாட்கள் தாமதமாக அரபு நாடுகளில் வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர். அத்தோடு விரைவில் எடிட்டிங் முடித்துவிட்டு, திரும்பவும் அரபு நாடுகளில் சென்சாருக்கு அனுப்பவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மோகன்லால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.



Advertisement

Advertisement