• May 18 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு திடீரென வெளியேற நினைக்கும் ஜி.பி.முத்து; வெளியான ஷாக் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6வது சீசன் தான் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. வழக்கமாக இல்லாமல் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே பிக்பாஸ் பல டாஸ்குகள் கொடுத்து வருகிறார்.

போட்டியாளர்களும் கடுமையாக போட்டிபோட தயாராகிவிட்டார்கள். 20 போட்டியாளர்கள் ஆரம்பத்தில் இருந்தார்கள், இப்போது மைனா நந்தினியும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைந்துள்ளார்.

இதில் மக்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமான பலரும் கலந்து கொண்டனர்.

அப்படி டிக் டாக், யூடியூப்-ன் மூலம் மக்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து. தனக்கென இணைய தளங்களில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார் ஜி.பி.முத்து.


அத்தோடு இந்த பிக்பாஸ் சீசனில் மக்களை பெரியளவில் கவர்ந்த போட்டியாளராகவும் இவர் திகழ்ந்து வருகிறார். ஜி.பி.முத்து. இதற்கிடையே தற்போது ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டிற்கு செல்ல நினைத்து வருகின்றார்.


கடந்த சில நாட்களாகவே அவர் பிக்பாஸ் வீட்டில் சந்தோஷமாக பார்க்க முடியவில்லை. அத்தோடு அவர் சகோதரர் ஆனந்த-யை பிக்பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியேற உதவி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 




Advertisement

Advertisement