• May 21 2024

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 48 பிரபலங்கள் வெளியிட்ட காமன் டிபி- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் பேமிலி சென்டிமெண்ட் ஸ்டோரியில் தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையையொட்டி படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது தளபதி 67 படத்தில் இணையவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.இந்த இரு படங்களில் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக விஜய் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.

அத்தோடு இவர் தனது 48வது பிறந்தநாளை வரும 22ம் தேதி கொண்டாடவுள்ளார். அவரைக் காட்டிலும் ஆண்டுதோறும் அவரது ரசிகர்களே இந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் 48வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 48 பிரபலங்கள் இந்த காமன் டிபியை வெளியிட்டு உள்ளனர். அதில் முதல்கட்டமாக இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு, அஜய் ஞானமுத்து, ரத்னகுமார், ஏஎல் விஜய், இசையமைப்பாளர் தமன், நடிகைகள் காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோர் வெளியிட்டனர்.

தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நடிகர்கள் பிரேம்ஜி, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜூன் தாஸ், நடிகைகள் ஜனனி ஐயர், மஞ்சு வாரியர், வரலஷ்மி உள்ளிட்டவர்கள் இந்த டிபியை வெளியிட உள்ளனர். அடுத்ததாக நடிகர்கள் சாந்தனு, சஞ்சீவ், விக்ராந்த், மஹத், தீனா உள்ளிட்டவர்களும் இந்த டிபியை வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement