• May 21 2024

பிக்பாஸ் சீசன் 6 பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்-அட சூப்பர் அப்டேட்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது கடந்த 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இது வரைக்கும் 5 சீசன்கள் நிறைவடைந்துள்ளது.

கடந்த ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், டிவி தொகுப்பாளர்கள், மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் நாட்டுப்புற கலைஞர்கள், யூடியூப் பிரபலங்கள் போன்றோர்கள் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டனர்.

மேலும் 5வது சீசன் முடிவடைந்ததும் முந்தைய 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பிக்பாஸ் 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். ஆனால் அதிலிருந்து பாதியிலேயே அவர் விலகினார். அவருக்கு பதில் சிம்பு, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த சமயத்தில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பற்றிய புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது வரும் அக்டோபர் மாதம் 2 ம் தேதி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது. இதையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க போகிறார்.பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் தேர்வு விரைவில் துவங்கப்பட உள்ளதாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement