• May 10 2024

மிஸ் இன்டர்நெஷனல் குயின் பட்டத்தை வென்ற பிக்பாஸ் நமிதா மாரிமுத்து

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சீசன் 5 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் நமிதா மாரிமுத்து.

திருநங்கையான இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகின்றார். இவர் பிக்பாஸில் கலந்து கொண்டு தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படையாகக் கூறி அனைவரின் ஆதரவையும் பெற்றார்.

மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் உடல் நிலை சரியில்லாததால் சில நாட்களிலேயே நிகழ்ச்சியிலிருநது வெளியேறினார்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது மிஸ் இன்டர்நெஷனல் குயின் பட்டத்தை வென்றுள்ளார். இது குறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement