• Sep 20 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும், தனது கடின உழைப்புக்காக பெயர் பெற்றவர். சினிமாவில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய விக்ரம் இன்று லட்சக் கணக்கான ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ளார். சேது, பிதாமகன், காசி, ஐ என படங்களின் கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்த ரிஸ்க், வேறு எந்த நடிகரும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது.

கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் உடலை வருத்தி நடிக்கவும் முடியும், கமர்ஷியல் படங்களில் மாஸ் ஹீரோவாக வெற்றி கொடியையும் நாட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார் விக்ரம். தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகியப் படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக கோப்ரா உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது.

இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதுபோல படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ‘யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அத்தோடு முன்னதாக தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் ஜூலை 11 ஆம் தேதி நடக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று நடிகர் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் அவர் பொன்னியின் செல்வன் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் நேற்றிரவு கோப்ரா இசை வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளதால் விக்ரம் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement