• Apr 03 2025

அடுத்தடுத்து கர்ப்பமாகும் சினிமா பிரபலங்கள்.. லிஸ்டில் யாரெல்லம் இருக்காங்க பாருங்க..

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சமீப காலமாகவே சினிமா பிரபலங்கள் பலரும் தாம் கர்ப்பமான இருக்கும் தகவலை  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக சன் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகைகளே இதில் அதிக முக்கியம் பெறுகின்றனர் .

அதன்படி, சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா செல்லஸ் நடிக்கும் போதே கர்ப்பமாகி உள்ளார். எனினும் அவர் நாடகத்தின் இறுதி வரை நடித்து வந்துள்ளார். அவர் தான்  கர்ப்பமானதை வீடியோ ஒன்றின் ஊடக தெரிவித்துள்ளார். அந்த வீடியோவைப்  பார்த்த பல ரசிகர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்தாலும் ஒரு சிலர் அதற்கு  எதிர்மாறான கருத்துக்களையும் தெரிவித்து இருந்தனர்.

d_i_a

மேலும் அதே சேனலில்  மிகவும் பிரபல்யமாக காணப்படும் வானத்தை போல சீரியலில் நடித்த பிரீத்தி கிஷோரும் தான் கர்ப்பமான விடயத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இவர்கள் காதலித்த போது பல பிரச்சனைகள் இடம்பெற்ற காரணத்தினால்  தற்போது தாம் மகிழ்ச்சியாக இருப்பதனை தெரிவிக்கும் முகமாகவே இதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தமது சந்தோஷத்தை பகிர்ந்து உள்ளனர்.


மேலும் அதே  சீரியலில் நடித்து வரும் கதிர் என்பவரின் மனைவியும் கர்ப்பமாக இருப்பதாக வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்து இருந்தார். மேலும் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜாவும் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement