• Apr 29 2024

"என்னைக் கட்டிப்பிடித்தாரு... செருப்பை விட்டிற்று அங்க இருந்து தப்பி ஓடிட்டேன்"... வைரமுத்து குறித்த உண்மையை போட்டுடைத்த சின்மயி…!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து. இவர் மீது பிரபல பின்னணி பாடகியான சின்மயி, பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். வைரமுத்து மீது பாடகி சின்மயி தொடர்ந்து மீடூ புகார்களை முன்வைத்து வந்தாலும், இதுவரை சட்ட ரீதியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இது குறித்து சின்மயி இடம் நிறைய கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டு இருந்தன. இதில் இவர் வைரமுத்துப் பற்றி பேசுகையில் "இனிமேல் இவரை வல்லவர், நல்லவர் என்று யாருமே சொல்ல மாட்டாங்கப்பா. ஏதோ நான் மட்டும் தான் அவரை பத்தி தப்பாக பேசினேன் என்று சொல்லிட்டு இருக்காங்க. எனக்கு முதலே முகம் தெரிஞ்சு நாலு பேரு வைரமுத்து பற்றி தப்பாக கூறியிருக்காங்க. ஆனால் அதில எல்லாத்தையும் அழிச்சிட்டு சின்மயி மட்டும் தான் வைரமுத்து பற்றி தப்பாக பேசினார் என்றால் என்ன நியாயம் இது?" எனக் கூறியிருக்கின்றார்.


அத்தோடு "விஜேபி பெங்களூரில் கூப்பிட்டு ஒரு வீடு கொடுத்திருக்காங்க அதனால் தான் நான் வைரமுத்து பற்றி பேசியிருக்கன் என்று கூறியிருந்தாங்க. ஆனால் அப்படி ஒரு வீடே எனக்கு உண்மையிலும் கிடைக்கலங்க. அதுமட்டுமல்லாது கே.ராஜன் என்பவர் கூடி என்னை சிதைச்சிடுவன் என்று பப்ளிக் இல் கூறியிருந்தார்" என தனக்கு கொலை மிரட்டல் எல்லாம் வந்திருந்ததாகவும் கூறியிருந்தார் சின்மயி.


மேலும் "யாரைக் கேட்டாலும் வைரமுத்து உத்தமர் என்று சொல்ல மாட்டாங்க. அதுமட்டுமல்லாது ஒரு பெண் குழந்தை ரகுமான் சார் கூட 2மணி நேரம் இருந்தாலும் சேவ் ஆக திரும்ப வரும். ஆனால் இவர் கூட இருந்தால் எந்த பெண் குழந்தையாவது சேவ் ஆக திரும்பி வருமா என்று யாரையாவது சொல்ல சொல்லுங்க" எனவும் கேள்வி எழுப்பி இருக்கின்றார் பாடகி சின்மயி.


மேலும் அவரிடம் வைரமுத்து தப்பான முறையில் நெருங்கியமை பற்றி கேட்ட போது "அவர் என்னைக் கட்டி அணைக்கும் போது இதில ஏதோ தப்பாக இருக்கும் என்று எனக்குத் தோணிச்சு. எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல,செருப்பை விட்டிற்று அங்க இருந்து தப்பி ஓடிட்டேன், இத்தனைக்கும் எங்க அம்மா கீழ இருக்காங்க என்று தெரிஞ்சு கூடி அந்தாள் என்கிட்ட தப்பாக நடக்க முயற்சி பண்ணினாரு" எனக் கூறியிருந்தார்.


எங்க அம்மா கிட்ட நான் சொல்லும் போது கூட எங்கம்மா "ஒரு வேளை உன் கரெக்டரை டெஸ் பண்ணுறாரோ தெரியல" என்று தான் சொன்னாங்க. அதுக்கு அப்புறமா எங்க அம்மாவே "இது எல்லாம் வேணாம் நாளைக்கு கொலை கூடி பண்ணிடுவாங்க" எனக் கூறியிருந்தாங்க.


மேலும் "இதனை நான் வெளிய சொன்னால் என்னை அவர் கூட படுத்திற்று வந்து பேசுது என்று சொல்லுவாங்க. நான் ஒன்னும் அவர் கூடப் படுக்கல" என்று ஓபன் ஆகப் பேசியிருக்காரு சின்மயி. "இந்த பொண்ணு மேல என்னால கை வைக்க முடியும் என்ற தைரியத்தில தான் அந்தாளு இப்படி பண்ணியிருக்கார், அந்தாளுக்கு அரசியல் பலம் இருக்கிறதால அந்தாளுக்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்காங்க.


அதுக்கு அப்புறமாக நான் அவங்கள பார்க்கும் போது எல்லாம் அவர் முகத்தை பார்க்க பிடிக்காமல் அவரு மனைவி கிட்ட கிளம்புறேன் என்று சொல்லிட்டு போய்டுவேன்" எனக் கூறிருக்கார் சின்மயி. இந்த விஷயத்தை எல்லாம் நான் சொல்லியும் பலரும் என்னை தான் தப்பாக கூறியிருக்காங்க. இவங்க வீட்டிலேயும் வைரமுத்து போய்ட்டு கதவை தட்டினால் தான் இவங்களுக்கு எல்லாம் புத்தி வரும் எனவும் கூறியிருக்கார்.


மேலும் அவர் பேசுகையில் "அதுக்கு அப்புறமாக கலை நிகழ்வு ஒன்றுக்காக என்னை வைரமுத்து கூப்பிட்டாரு. ஆனால் நான் போகல. உடனே உனக்கு நாக்கு சரி இல்லை அது இது என்று சொல்லி என்னையும் எங்க அம்மாவையும் கண்டபாட்டுக்கு திட்டிட்டாரு" என கவலை ததும்ப பதிலளித்திருந்தார் சின்மயி.


அத்தோடு வைரமுத்து சாரால் ஏதாவது வாய்ப்புக்கள் கிடைத்ததா எனக் கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கும் இல்லை என்றே பதிலளித்திருந்தார் சின்மயி. அத்தோடு வைரமுத்து பிறந்த அதே தேதியில் எங்க அம்மாவும் பிறந்திருப்பதால் அம்மாவுக்கு விஷ் பண்ணுறதை நான் நிறுத்திட்டேன் எனக் கூறியிருந்தார்.


அத்தோடு ராதா ரவி ஏன் உங்கள பான் பண்ணியிருந்தார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு "அவரும் வைரமுத்துவும் ஒரே கட்சி அதுதான் காரணம், பணத்தை வாங்கிட்டு வாய்ப்பு தல்லாம் எண்டிட்டு அப்புறமாக சந்தா கட்டல அது இது என்று சொன்னாங்க, காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் படி கூறி இருந்தாங்க. நான் பண்ணாத தப்புக்கு நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்" எனப் பதிலளித்திருந்தார்.


ராதாரவிக்காக பாடல் பாடும் படி கேட்கும் போது " தீயவர் வாழவும் நல்லவர் தாழவும் செய்வதேனோ இது தர்மம் தானோ.." எனப் பாடி அசத்தி இருக்கின்றார். அத்தோடு சின்மயிக்கு தமிழில் கிடைத்த வாய்ப்புக்கள் யாவும் தட்டி பறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். அத்தோடு ராதாரவிக்கு கொடுக்கப்படாத ஒரு விருதையே தெலுங்கில் கொடுக்கப்பட்டது எனக் கூறி புழுகிட்டு இருக்காரு ராதாரவி எனவும் கூறியிருந்தார் சின்மயி.


இவ்வாறாக பாடகி சின்மயி அந்தப் பேட்டியில் வைரமுத்து, ராதாரவி பற்றிய பல உண்மைகளை போட்டு உடைத்திருக்கார். இவர் கூறிய இந்தப் பதிலானது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement