• Feb 23 2025

பாடகியின் பாட்டுக்கு தான் நடிகை உதடு அசைப்பார்.. ஆனால் நான் உதடு அசைவுக்கு பாடினேன்: சின்மயி

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

பொதுவாக பின்னணி பாடகிகள் பாடும் பாட்டுக்கு தான் நடிகைகள் உதடு அசைப்பார்கள்,  ஆனால் நான் த்ரிஷா நடித்த காட்சிக்கு ஏற்ப பாடினேன் என்றும் சமீபத்தில் பாடகி சின்மயி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் இந்த படம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 



இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்ததாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது:

’96’ படத்தில் பழைய நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேரும் காட்சியில் த்ரிஷா ஒரு பாட்டு பாடுவார். ’தென்றல் வந்து தீண்டும்போது’ என்ற அந்த பாடலின் காட்சி ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலையில் அதற்கு ஏற்ப உதட்டசைவுடன் நான் பாட வேண்டும் என்று இயக்குனர் என்னிடம் கேட்டுக் கொண்டார். 

குளோசப் ஆக த்ரிஷா பாடுவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் நான் த்ரிஷாவின் உதட்டசைவை மிகவும் கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றபடி அந்த பாடலை நான் பாடினேன், இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது என்று சின்மயி தெரிவித்துள்ளார். 

மேலும் ’96’ படத்தில் இடம்பெற்ற அந்த காட்சியையும் அவர் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஒரு நடிகை நடித்த காட்சிக்கு ஏற்ப அவரது உதட்ட அசைவுக்கு ஏற்ப ஒரு பின்னணி பாடகி பாடியதாக வெளிவந்திருக்கும் தகவல் திரை உலகினர்களுக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.





Advertisement

Advertisement