• Sep 20 2024

குக்வித் கோமாளி அஸ்வின் நடிப்பில் வெளியான ‘செம்பி’ பட ட்ரைலர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் பிரபு சாலமன். இவர் இயக்கத்தில் வெளியான மைனா கும்கி ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

ஆனால் சமீபகாலமாக இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் தோல்வியைச் சந்தித்ததால் கடனாளி ஆகினார்.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘செம்பி’. பிரபுசாலமனின் மற்ற படங்களைப் போல இந்த படமும் காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டதுதானாம்.

அத்தோடு டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். ஜீவன் ஒளிப்பதிவில் புவன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் அஸ்வினுக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இவ்வாறு இருக்கையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement