• Apr 28 2024

சந்திரமுகியாக மாறும் நடிகை த்ரிஷா- அப்போ ஜோதிகா நோ சொல்லி விட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2005-இல் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த்,பிரபு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,ஜோதிகா,நாசர் மற்றும் வடிவேலு போன்ற முன்னணி நடிகர்களுடன் உருவான திரைப்படம் சந்திரமுகி. இத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அள்ளி குவித்தது.

இந்நிலையில் சந்திரமுகி 2வது பாகத்தினை ரஜினிகாந்தின் அனுமதியுடன் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார்.முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனமானது இத்திரைப்படத்தினை தயாரிக்க இருந்தபோதிலும் இப்பொழுது லைக்கா நிறுவனமானது இப்படத்தினை தயாரிக்க உள்ளது

இத்திரைப்படத்திற்கு பாகுபலி இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்க உள்ளளார். அதேவேளை முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியது.

இந்நிலையில் நடிகை ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார்? அல்லது நடிகை ஜோதிகாவே மீணடும் நடிப்பாரா என்கின்ற பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.அந்தவகையில் ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவலில் நடிகை ஜோதிகா மறுத்ததை அடுத்து இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க போகின்றார் என்ற கேள்விகள் பல உள்ளன.

இந்த நிலையில் இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பளம் மற்றும் கால்ஷீட் திகதிகள் முடிவு செய்யப்பட்டவுடன் த்ரிஷா இந்த படத்தில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement