• May 12 2024

மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா?- வெளியாகிய ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய வனிதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய பிரபலங்களில் ஒருவரே நடிகை வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் ஆவார். மேலும் 'சந்திரலேகா, நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றார். அது மட்டுமல்லாது இவர் ஒரு சிறந்த தயாரிப்பாளரும் கூட. அதாவது எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகிய பல நடிகர்களின் படங்களைத் தயாரித்து இருக்கின்றார்.

நடிகை வனிதா தனது தந்தையுடனான சில குடும்பப் பிரச்சனைகளின் காரணமாக தந்தை, மற்றும் சகோதரர்களைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இவ்வாறு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3-இன் போட்டியாளராகக் கலந்து கொண்டு அங்கும் பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தார்.

மேலும் 3-ஆவது முறையாக பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து ஒரு சில மாதங்களிற்குள் அவரையும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து கொண்டார். இந்நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் 'வாசுவின் கர்ப்பிணிகள்' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இவருடன் இணைந்து இப்படத்தில் லீனா குமார், சீதா, சுஜா வருணி, அனிகா, கோபிநாத் எனப் பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற அதே நேரம் இப்படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் வனிதா கர்ப்பமாக காட்சி அளிக்கின்றார். இதனால் அப்போஸ்டர் வெளியாகி பெரும் குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கின்றது. ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கியிருந்த வனிதாவுக்கு இப்போஸ்டரும் வெளியாகி வனிதா கர்ப்பமாக இருக்கின்றார் என்ற விமர்சனத்தை பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில் அது உண்மையல்ல என நிரூபிக்கும் வகையில் நடிகை வனிதா விஜயகுமார் 'வாசுவின் கர்ப்பிணிகள்' எனப் பெயரிட்டு அந்தப் போஸ்டரை தனது இன்ஸடாவில் பதிவிட்டுள்ளார். இப்போஸ்டர் தற்போது ரசிகர்களால் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement