• May 13 2024

27 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி விஜய்யின் மூலம் ஜோடி சேர்ந்த குஷ்பு மற்றும் பிரபு- அட இது புது நியூஸாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

1990 களில் தமிழ் சினிமாவில் பிரபலமான ஜோடியாக இருந்தவர்கள் தான் பிரபு மற்றும் குஷ்பு. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன்சின்னதம்பி, பாண்டித்துரை, கிழக்குக்கரை என கிட்டத்தட்ட 10 திரைப்படங்களில் இணைந்து இருவரும் நடித்திருக்கின்றனர்.

இதனால் அந்தக் காலத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் குஷ்பூ இயக்குநர் சுந்தர்.சியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகளும் உள்ளனர்.

இன் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதைத் தவிர்த்து வந்தனர். இருப்பினும் தற்போது இருவரும் பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் குஷ்பு நடிப்பதைத் தாண்டி தயாரிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, நடுவராக பல ரோல்களில் அசத்தி வருகிறார்

மேலும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்திலும் இவர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கசிந்தன. இது தவிர இப்படத்தின் மூன்று போஸ்டர்களும் விஜய்யின் பிறந்த தினத்தில் வெளியாகி ரசிகர்களைக் குஷிப்படுத்தியிருந்தது. அடுத்த அப்டேட் எப்போது வரும் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஷுட்டிங் படங்கள் கூட கசியுமா என பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் இப்படத்தில் பிரபுவும் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது. கிட்டதட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுவும் குஷ்புவும் இணைந்து நடிப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement