• May 12 2024

அச்சு அசல் விஜய் சேதுபதியை போலவே இருக்கும் நபர்- வைரலாகும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

எந்த ஒரு குடும்பப் பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து தனது தனித்திறமை வாய்ந்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. தனது இயல்பான நடிப்பின் மூலமாகவே தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருக்கின்றார்.

அதாவது நம்ம வீட்டில நமக்கென்று ஒரு பையன் இருந்தால் அவன் எப்படி இருப்பானோ அப்படி ஒரு இயல்பான முகம், கட்டுமஸ்தான ஒரு உடலமைப்பு, பளிச் பளிச் என்ற கண்கள், எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் பொருந்திப் போகும் நடிப்பு என அனைத்து விதமான அம்சங்களிலும் சிறந்து விளங்குபவரே நம்ம விஜய் சேதுபதி.

வில்லனாக நடிக்கச் சொன்னால் அது போன்று மாறி வில்லனாகவே நடிப்பார். காதல் என்று வந்தால் ரொமான்ஸ் ஹீரோவாக மாறி அதற்கேற்றவாறு நடிப்பார். இவ்வாறாக அனைத்து கதாபாத்திரங்களிலும் தன்னுடைய நடிப்பை மக்களுக்கு பிடிக்கும் வகையில் வெளிப்படுத்துவார். அவர் ஒரு படத்தில் கமிட் ஆகினால் அந்த படத்திற்கு என்றே ரசிகர்களின் மத்தியில் ஒரு தனி சிறப்பு வந்து விடும்.

தொடர்ந்து பல படங்களில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த வருடம் 'காத்து வாக்கிலே ரெண்டு காதல், விக்ரம்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை இவருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. அது மட்டுமல்லாது பல படங்களில் கமிட்டாகியும் இருக்கின்றார்.

இந்நிலையில் அச்சு அசல் விஜய் சேதுபதி போலவே இருக்கும் நபர் ஒருவர் தற்போது சின்னத்திரைக்கு நடிக்க வந்துள்ளார். அதாவது "கனா காணும் காலங்கள்' தொடரில் நடிக்க வந்துள்ளதாக கூறப்படுகின்றது. வெள்ளித்திரைக்கு ஒரு விஜய் சேதுபதி போல சின்னத்துரைக்கும் ஒரு விஜய் சேதுபதி வந்திருக்கின்றார் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் இவரது புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement