• May 12 2026

10 நாட்களாக தாங்க முடியாத வலி...- இன்ஸ்டாகிராமில் வேதனையைப் பகிர்ந்த சைத்ரா ரெட்டி

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் தற்போது பரபரப்பான கதைக்களத்துடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஆக்டிவாக இருப்பவர்.


சமீபத்தில் தனது Instagram பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கடந்த 10 நாட்களாக கடுமையான வலியை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கான காரணமாக, அவர் தனது காதில் புதிய கம்மல் போட்டிருப்பதாக கூறியுள்ளார். 

புதிய கம்மல் போடுவது ஒரு சந்தோஷமான விஷயமாக இருந்தாலும், அதனால் ஏற்பட்ட வலி மிகவும் கடுமையாக இருந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும், அந்த வீடியோவில் தனது அனுபவத்தை நகைச்சுவையுடன் கூறியுள்ள சைத்ரா ரெட்டியின்  இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு விரைவில் வலி குறைய வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement