• Jun 26 2026

எனக்கு இணையாக டான்ஸ் ஆட யாருமே இல்லை.. ஸ்ரீலீலாவின் பேச்சால் கடும் அப்செட்டில் பிரபலங்கள்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஸ்ரீலீலா, தனது நடனத் திறமையால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். சமீப காலமாக சமூக வலைத்தளங்களில், "எனக்கு இணையாக ஆட யாரும் இல்லை"என்று ஸ்ரீலீலா கூறியதாக ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது. 

இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்கு நடிகை நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.


இதுகுறித்து பேசிய ஸ்ரீலீலா, "அகந்தை என்பது என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. நான் அப்படிப்பட்ட சூழலில் வளர்க்கப்படவும் இல்லை. என்னுடன் பணியாற்றும் அனைத்து கலைஞர்களையும் நான் மனப்பூர்வமாக மதிக்கிறேன். யாரையும் குறைத்து பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்புவோர் தங்களது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்."என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "என்னை நெருக்கமாக அறிந்தவர்களுக்கு என் உண்மையான குணம் என்ன என்பது நன்றாக தெரியும். எனவே இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்." என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீலீலாவின் இந்த விளக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பல ரசிகர்கள் அவரது பணிவான பதிலை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

பிரபலங்களின் பெயரை பயன்படுத்தி போலியான மேற்கோள்கள் மற்றும் ஆதாரமற்ற தகவல்கள் பரவுவது அதிகரித்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்ரீலீலா அளித்த இந்த விளக்கம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


Advertisement

Advertisement