பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனின் இடம் பெற்ற கார் டாஸ்க் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாருவையும் கமரூதீனையும் ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருந்தார் விஜய் சேதுபதி. தற்போது பலர் சாண்ட்ராவுக்கு குரல் கொடுத்தாலும் சிலர் பார்வதிக்கும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அதாவது இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கடும் போட்டியாளராக காணப்பட்ட பார்வதி சபரியால் தாக்கப்பட்டார். இதன் போது அவருடைய கண் வீங்கி மிகவும் அவஸ்தைப்பட்டார். அதற்குப் பிறகு அதை வேண்டுமென்று தான் செய்ததாக சபரி ஒப்புக்கொண்டார். ஆனால் இதை ஒரு பெரிய விடயம் ஆக்கவில்லை பார்வதி. சபரிக்கு ரெட் கார்ட்டும் கொடுக்கவில்லை.
அதேபோலத்தான் விக்கல் விக்ரமும், கானா வினோத்தும் செய்திருந்தனர். ஆனால் அவர்களும் தண்டிக்கப்படவில்லை.
சாண்ட்ரா கூட நிறைய புறம் பேசி இருக்கின்றார். திவ்யாவை பற்றி கூட புறம் பேசி இருந்தார். மேலும் சாண்ட்ராவுக்கு சின்ன விஷயம் என்றாலும் உடல்நிலை சரியில்லாமல் போகின்றது.
இப்படியான போட்டியாளரை எப்படி பிக் பாஸில் தேர்வு செய்தார்கள் என்று பிக் பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது எல்லாமே சாண்ட்ராவின் சூழ்ச்சி தான். அவர்தான் வேண்டுமென்று வாக்குவாதத்தை ஆரம்பித்தார். மேலும் சாண்ட்ரா, சபரி, விக்ரம் ஆகியோர்கள் பேசிய கெட்ட வார்த்தைகள் யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் பார்வதியும் கம்முவும் பேசியவை தான் தெரிகின்றது போல. கமரூதீனை கூட சாண்ட்ரா தப்பாக பேசியிருந்தார். அதைப்பற்றி தட்டிக் கேட்கவில்லை விஜய் சேதுபதி. இறுதியாக சாண்ட்ராவின் காலில் கமரூதீன் விழுந்து மன்னிப்பு கேட்ட போதும் கூட அவர் பயத்தில் நடுங்குகின்றார். இது எப்படியான நடிப்பு என்று தெரியவில்லை.
எனவே சாண்ட்ராவை கர்மா சும்மா விடாது. பார்வதிக்கும் கமருதீனுக்கும் நடந்தது அநியாயம் என்று ஒரு சிலர் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .
Listen News!