நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் தற்போது சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு போலீசார் மன்சூர் அலிகானை சென்னை காவல் துறைக்கு அனுப்பியதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென தேசிய மகளிர் ஆணையம் புகார் கொடுத்ததன் அடிப்படையில் 1000 விளக்கு அனைத்து மகளிர் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு சம்மன் கொடுக்கப்பட்டு அவர் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளித்தார். தான் எந்த விதமான மன வருத்தத்திற்கும் தெரிவிக்கவில்லை எனவும் நடிகை திரிஷா அதற்கு வருத்தப்பட்டிருந்தால் தானும் அதற்க்கு வருத்தப்படுகிறேன் என போலீஸ் விசாரணையில் கூறப்பட்டதாக அறியப்பட்டது. அந்த வாக்கு மூலத்தை வீடியோ பதிவு மூலமாகவும் போலீசார் வாக்கு மூலம் பதிவு செய்த நிலையில்.
மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து பேசியதற்கு நேற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு இருக்கிறார். மேலும் அவர் மன்னிப்பு கேட்டதற்கு இணங்க நடிகை திரிஷா அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளதாக டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுருந்தார்.
தற்போது 100 விளக்கு அனைத்து மகளிர் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையை நாடி இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் இருவரும் மன்னிப்பு கோரி இருந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பில் அடுத்த கட்ட விசாரணைகள் எப்படி மேற்கொள்ள வேண்டும் மென சட்ட நிபுணர்களின் ஆலோசையை கேட்ட 100 விளக்கு அனைத்து மகளிர் போலீசார் அனுப்பியுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.
நடிகை திரிஷா குறித்து அவர் மன்னிப்பு கேட்ட விவகாரம் தொடர்பாக திர்ஷாவிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
Listen News!