விஜய் டிவியில் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் முன்னணி பெண் தொகுப்பாளர்களாக இருக்கும் டிடி, விஜே ரம்யா, பாவனா, பிரியங்கா இவர்களின் வரிசையில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தும் காணப்படுகிறார்.
சன் டிவி, நியூஸ் 7 தமிழ் போன்ற சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனிதா சம்பத், அதன் பிறகு சர்கார், காப்பான் உள்ளிட்ட படங்களில் நியூஸ் ரீடர் ஆகவே நடித்தார். அதன் பின் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக பங்கேற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா, அந்த நிகழ்ச்சியில் நிறைய விஷயங்கள் செய்து, தனக்காக மட்டுமின்றி தன்னோட கண்டஸ்டன்ஸ்காகவும் குரல் கொடுத்து இருந்தார்.
எனினும், ஏதோ ஒரு சில காரணத்தினால ஒரு நெகட்டிவிட்டி வந்தாலும் அதை சமாளிச்சிட்டு பிக் பாஸ் ஹவுஸ்ல கிட்டத்தட்ட 85 நாட்களுக்கு மேல இருந்து வெளியேறினார்.
அனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த நேரத்தில், கொரோனா டைம் என்பதால் அவர் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.
இதை தொடர்ந்து வீட்டுக்கு போன ஒரே நாள்ல, வெளியூர் சென்ற அதாவது சீரடி கோவிலுக்கு சென்ற அவருடைய தந்தை ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தார். ஆனாலும், அவரை பார்க்க முடியாமல், அதில் இருந்து மீள முடியாமல் ரொம்பவும் துடிதுடித்து போய் இருந்தார் அனிதா.
இந்த நிலையில், தற்போது அவர் வழங்கிய பேட்டி ஒன்றில் தனது தந்தை இறப்பின் பின்னர் தனது அம்மா அனுபவித்த வலிகளையும், அதனால் தான் பட்ட துயரங்களையும் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,
சிரிப்பு என்ற ஒன்று என் லைஃப்ப விட்டுப் போயிடுச்சு. பாட்டு கேக்குறதும் ஸ்டாப் பண்ணிட்டேன். பூ கூட ரொம்ப ரர்ரா தான் வச்சிப்பன். அதுவும் எங்க மாமியார் சொன்னா மட்டும்.
நெற்றியில் போட்டு வைக்கிறதும் குறைஞ்சிடுச்சு. அதுக்கு காரணம் என் அம்மா பாத்து பீல் பண்ணுவாங்களா என்று தான். அம்மா ஒரு நாளும் அப்படி நினைக்க மாட்டாங்க, ஆனாலும் என் மனசுக்குள்ள ஒரு வலி இருக்கும். நான் பொட்டு, பூ வச்சா அத பார்த்து எங்க அம்மா என்னால வைக்க முடியலையே என்று யோசிப்பாங்களோ என்று..
அப்பா இறந்த போது, ஒரு பக்கம் அப்பா ஃப்ரீசர் பாக்ஸ்ல இருக்க, இன்னொரு பக்கம் போன்ல நிறைய நெகட்டிவிட்டி வந்துச்சு.
அதுமட்டுமில்லாமல், அம்மா, தம்பி இவங்க எல்லாருமே சைக்காலஜிஸ்ட் கன்சல் பண்ணி தூக்க மாத்திரை வாங்கி போட்டு தூங்கி இருக்காங்க.
எங்க லைஃப்ல நடந்த சில இன்சிடெண்ட் சொல்ல கூட பயமா இருக்கு. என் வாழ்க்கையை கிட்டத்தட்ட இந்த மூணு வருஷங்கள் ரொம்ப கஷ்டமா போயிடுச்சு அப்படின்னு சொல்லி இருக்காங்க அனிதா சம்பத்.
இந்த கஷ்டத்தை எல்லாம் அனிதா சொல்லும்போது, அதை பார்த்த எல்லாருமே கண் கலங்கி கவலைப்படாதீங்க அனிதா அப்படின்னு அவங்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!