• Sep 12 2025

சனி, ஞாயிறு ஃபுல் மஜாதான்..!வைரலாகும் ப்ளூ சட்டை மாறனின் எக்ஸ் தள பதிவு...!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

நகைச்சுவை மோதலுடன் கூடிய விமர்சன பாணியில் கோலிவுட் ரசிகர்களிடம் தனி இடம் பெற்றவர் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். படங்களின் நுணுக்கங்களைச் சுட்டிக் காட்டும் அவரது விமர்சனங்கள், விமர்சனத்திற்கும், பொழுதுபோக்குக்கும் இடைப்பட்ட ஒரு தனி ருசியைக் கொண்டவை. இவருக்கு எதிர்ப்பு இருந்தாலும், அவரை ரசிகனாய் எதிர்பார்ப்பவர்கள் ஒரு பெரிய பட்டாளமாகவே இருக்கிறார்கள்.


இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ்தள பக்கத்தில், “வார இறுதி ஃபுல் ட்ரீட்” காத்திருக்கிறது எனக் கூறி ஒரு சுவாரஸ்யமான பதிவு செய்துள்ளார்.  ஞாயிற்றுக்கிழமை மூன்று முக்கியமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன:

இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா  இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் நேரு ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.


விஜய் அரசியல் பிரவேச சுற்றுப்பயணம் தொடக்கம் – நடிகர் விஜய், தனது தமிழக வெற்றி  கழக கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்க உள்ளார். இந்த நிகழ்வை அவரது ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்த்துள்ளனர்.

'இட்லிகடை' இசை வெளியீட்டு விழா – தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'இட்லிகடை' படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற உள்ளது. இந்த மூன்று நிகழ்வுகளும், ரசிகர்களுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் ஒரு உண்மையான ஃபுல் ட்ரீட் என்பதை ப்ளூ சட்டை மாறன் உறுதியாகச் சொல்கிறார்.

Advertisement

Advertisement