• Jun 24 2026

5வது நாளில் திடீர் சரிவை சந்தித்த Blast படம்..! மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுன் சர்ஜா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் ‘Blast’. இந்த படம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கராத்தே மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் சர்ஜா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த ஆக்‌ஷன் திரைப்படத்தை சுபாஷ் K. ராஜ் இயக்கியுள்ளார். படத்தில் பிரீத்தி முகுந்தன், அபிராமி மற்றும் அர்ஜுன் சிதம்பரம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ‘Blast’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஐந்தாவது நாளை கடந்த நிலையில் வசூலில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

வெளியான அறிக்கைகளின்படி, இந்த திரைப்படம் 5வது நாளில் இந்தியாவில் நெட் வசூலாக ரூ.3.60 கோடி பெற்றுள்ளது. இது முந்தைய நாளில் கிடைத்த ரூ.6 கோடியுடன் ஒப்பிடும்போது சுமார் 40 சதவீத சரிவு என கூறப்படுகிறது.


மேலும் இந்த படம் இதுவரை மொத்தமாக இந்தியாவில் ரூ.17.55 கோடி நெட் வசூலை பெற்றுள்ளது. இந்திய கிராஸ் வசூல் ரூ.20.17 கோடியாக உயர்ந்துள்ளது.

5வது நாளில் மட்டும் 2,707 காட்சிகளில் படம் திரையிடப்பட்டுள்ளது. அதில் தமிழில் ரூ.3 கோடி வசூலும், தெலுங்கில் ரூ.60 லட்சமும் கிடைத்துள்ளது.

வெளிநாடுகளில் 5வது நாளில்  ரூ.75 லட்சம் வசூல் செய்துள்ளது. இதனால் மொத்த வெளிநாட்டு வசூல் ரூ.6.30 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகளாவிய அளவில் ‘Blast’ திரைப்படம் இதுவரை ரூ.26.47 கோடி வசூலை பெற்றுள்ளது.

மாநில வாரியான வசூலில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து ரூ.2 கோடி வசூலை வழங்கியுள்ளது. கேரளா ரூ.1.35 கோடியுடன் அடுத்த இடத்தில் உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரூ.55 லட்சமும், கர்நாடகா ரூ.23 லட்சமும் வசூலித்துள்ளன.

Advertisement

Advertisement