• Jan 19 2025

பல்ல கடிச்சிட்டு படத்த பாருங்க.. சொல்லுற அளவுக்கு ஒன்னுமே இல்ல! கதறும் தியேட்டர் உரிமையாளர்கள்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் இன்றைய தினம் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பற்றி கலவையான விமர்சனங்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த படத்தை கமலஹாசன், சங்கர் குடும்பம் உட்பட சித்தார்த், ரோபோ சங்கர், கூல் சுரேஷ் உட்பட பல பிரபலங்களும் தியேட்டருக்கே சென்று நேரடியாக பார்த்துள்ளார்கள்.

இந்த நிலையில், இந்தியன் 2 படம் பற்றி தியேட்டர் உரிமையாளர் கூறுகையில், இந்த படத்திற்கு அவ்வளவாக கூட்டம் வரவில்லை. மொத்தம் ஆறு ஸ்கிரீன் இருக்கு. ஆனால் படம் போடவே ஒரு ஸ்கிரீன்க்கு உள்ள கூட்டம் தான் இருக்கு.


இந்தியன் 3 கொஞ்சம் பெட்டரா இருக்கும்ங்குற மாதிரி கொஞ்சம் விமர்சனம் வந்தது. அதனால இந்தியன் 2 கொஞ்சம் லேட்டா பார்க்கலாம், எதுக்கு அடிச்சு பிடிச்சு போய் பார்ப்பான் என்று மக்கள் நினைத்து இருக்கலாம். இதுக்கு  ஓப்பனிங் பெருசா இல்ல.

ஆனா ஷங்கர் சார்ட உழைப்பு கண்டிப்பா வெற்றி பெறணும். இந்தியன் 2 படம்  அஞ்சு ஆறு வருஷமா எடுத்துட்டு இருக்காங்க. அதுல ரெண்டு மூணு டெக்னிகஸ் எல்லாம் இறந்து இருக்காங்க. எனவே இந்த படம் ஹிட் ஆகணும். நல்லா இருக்கணும்னு சொல்ல ஆசையா இருக்குது என்று சொல்லி உள்ளார்.

மேலும் இதை பார்த்த இளம் ரசிகர்கள், 3 மணி நேரத்தை பல்லை கடிச்சிட்டு பாருங்க, சொல்லுற அளவுக்கு ஒன்றும் இல்லை என தமது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement