• Sep 20 2024

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கும் திகதியும் அறிவிச்சாச்சு- அடுத்தடுத்து சர்ப்ரைஸ்களை கொடுத்து வரும் விஜய்டிவி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்கள் என்பன சூப்பன ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.அத்தோடு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் புதுமையாக செய்வதிலும் இது முதலிடம் வகிக்கின்றது.

மேலும் கடந்த 20 வாரங்களாக ஒளிபரப்பப்பட்ட முக்கிய நிகழ்ச்சியான குக்வித் கோமாளி சீசன் 3 ஆனது நேற்றைய தினம் தான் முடிவடைந்தது. இதில் ஸ்ருத்திகா டைட்டில் ஜெயித்து ஐந்து லட்சம் ருபாய் பரிசை ஜெயித்தார்.

இரண்டாம் இடம் தர்ஷனுக்கு கிடைத்தது. அவருக்கு 3 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்தது.இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து பிக் பாஸ் சீசன் 6 எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்கள் தற்போது கேட்க தொடங்கி இருக்கின்றனர்.

வந்திருக்கும் தகவல்களின்படி பிக் பாஸ் 6 வரும் அக்டோபர் 2ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கும் என தெரிகிறது. கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement