• May 18 2024

குக்வித் கோமாளி சீசன் 3 இன் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா பகிர்ந்த சுவாரஸியமான தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் நேற்றைய தினம் முடிவடைந்த நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி சீசன் 3. மக்களில் பேவரிட் ஷோவான இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ஸ்ருதிகா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டது.

நேற்றைய தினம் 3 ரவுண்டுகள் மற்றும் வித்தியாசமான டாஸ்குகளில் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.இதையடுத்து இதில் இரண்டு சுற்றுகளில் நடிகை ஸ்ருதிகா வெற்றி பெற்றுள்ளார். அவர் 100க்கு 96 பாயிண்ட்களை பெற்று வெற்றியாளராகியுள்ளார். தொடர்ந்து முதல் ரன்னர் அப்பாக தர்ஷனும் இரண்டாவது ரன்னர் அப்பாக அம்மு அபிராமியும் வெற்றி பெற்றனர்.

போட்டியில் வெற்றியாளரின் கோமாளியாக இருந்த புகழுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. பாலாவிற்கும் சிறப்பு பரிசாக 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது.

தனது ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் புகழ், பாலாவிற்காக கொடுத்தார். தான் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்காததை சுட்டிக் காட்டிய அவர், இந்த பரிசுக்கு பாலாதான் தகுதியானவர் என்றும் குறிப்பிட்டார். மேலும் பெங்களூருவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பாலா இந்த பரிசுத்தொகையை அளிக்க உள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

நோ வார் என்றும் பசுமையான சுற்றுச்சூழல் என்றும் கான்செப்ட் பேசில் ஸ்ருதிகா தனது இறுதிப்போட்டியின் இறுதிச் சுற்றை எதிர்கொண்டார். இது நடுவர்களை வெகுவாக கவர்ந்தது. இதைப்பார்த்த நடுவர் தாமு வெகுவாக உணர்ச்சிவசப்பட்டார். ஸ்ருதிகா இளையவராக இல்லாமல் இருந்திருந்தால் அவரது காலில் விழுந்திருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து நெகிழ்ச்சியடைந்த ஸ்ருதிகா அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். இந்த தருணத்தில் அவரது கணவரும் உடனிருந்தார். அப்போது, அவர் ஒரு விஷயத்தை பகிர்ந்துக் கொண்டார். ஸ்ருதிகா போட்டியின் இடையில் எலிமினேஷன் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.
இதனால் மிகவும் அப்செட்டான ஸ்ருதிகா, அதிலிருந்து மீண்டு ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதில் பெஸ்ட்டாகத்தான் இருக்க வேண்டும் என்ற வைரலாக்கியத்துடன் தற்போது ஜெயித்துக் காட்டியுள்ளதாகவும் அவரது கணவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஸ்ருதிகா, தனக்கு மிகவும் இளம்வயதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அதன் அருமை தெரியாமல், தான் ஷைன் ஆகாமல் விட்டுவிட்டதாகவும், இந்த தோல்வி தான் எடுத்துகொண்ட எல்லா விஷயத்திலும் தன்னை வைராக்கியத்துடன் வெற்றி பெற செய்துள்ளதாகவும் அவர் மகிழ்சசியுடன் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement