• May 18 2024

நடிகை சாய்பல்லவியின் கார்கி திரைப்படம் இதுவரை பெற்ற வசூல் இத்தனை கோடியா?- குஷியில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக நடிகர்களைப் போல முக்கிய நடிகைகளும் கதாப்பத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அதிலும் நயன்தாரா ,த்ரிஷா, ஹன்சிகா, சாய்பல்லவி ,ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் சோலோ ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் மலையாளம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல்யமான நடிகையாக வலம் வரும் சாய்பல்லவியின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கார்கி. இப்படத்தை கௌதம் ராமசந்திரன் இயக்கியிருந்தார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது. இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றதோடு வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இதுவரை உலகம் முழுவதும் படம் ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவருடைய ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement