• Apr 18 2026

பிக் பாஸிற்கு ரீ- என்ட்ரி கொடுத்த 3 எக்ஸ் கன்டென்ஸ்! 'மக்கள் தேவையில்லாம என் பேர கெடுத்துட்டாங்க..'' புலம்பிய நிக்சன்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இது பினாலே வாரம் என்பதால் இதுவரை எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று வரை அக்‌ஷயா, அனன்யா, வினுஷா, பிராவோ, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ஜோவிகா, ரவீனா, பூர்ணிமா, கானா பாலா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-எண்ட்ரி கொடுத்திருந்தனர்.


இந்த நிலையில், இன்று வெளியான முதலாவது ப்ரோமோவில், விசித்ரா, நிக்சன், விஜய் வர்மா ஆகியோர் அதிரடியாக ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளனர்.


இதன் போது, உள்ளே இருந்த போட்டியார்கள் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இதை தொடர்ந்து எல்லாரும் கேங்க தனிய பிரிங்க.. என கூல் சுரேஷ் கிண்டல் செய்கிறார்.


மேலும், நான் 30 வீதம் தான் பண்ணினான்..இப்போ அதை 100 வீதத்துக்கு மேல ப்ளாஸ் பன்னிட்டாங்க என நிக்சன் சொல்லுகிறார்.


ஆக மொத்தத்தில் தற்போது வெளியான ப்ரோமோவின் அடிப்படையில், நிறைய சம்பவம் இருக்கு என்பது தெரிகின்றது.

Advertisement

Advertisement