• Jan 19 2025

தனிக்குடித்தனத்திற்கு திட்டம் போட்ட ரோகிணி.. கண்ணீர்விட்டு கதறிய மனோஜ்! கலவரத்தில் முத்து குடும்பம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க  ஆசை. குறித்து சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது.

அதில், மீனா,மனோஜ், முத்து ஆகியோர் ரோகிணியின் வீட்டில் இருக்க, ரோகிணியின் அம்மா என்ன விஷயமாக வந்திங்க என விசாரிக்க, மீனா நடந்தவற்றை சொல்லுகிறார்.


இதன் போது மனோஜ், ரோகிணியின் போட்டோவை காட்டவும் தெரியாது என சமாளிக்கிறார் ரோகிணியின் அம்மா. இதன் போது மனோஜ் உடைந்து அழுகிறார். என்னை ஒரு பொண்ணு ஏமாத்திட்டு போனா, என் சந்தோசம் எல்லாமே போச்சு, அப்போ தேவதை போல வந்தவ தான் ரோகிணி என அழுகிறார். இதை கேட்டு ரோகிணியும், ரோகிணியின் அம்மாவும் அழுகின்றனர்.அப்போது, குறித்த சிறுவன் அழாதீங்க அங்கிள் என கண்ணை தொடைத்து விடுகிறான்.


அவர்கள் வெளியே போக, ரோகிணியிடம் பேசிய அவரின் அம்மா, உனக்கு நல்ல புருஷன் கிடைச்சு இருக்கு. நான் அமைச்சு தந்த வாழ்க்கை தான் தப்பா போச்சு.. நீ நல்ல வாழ்க்கைய தான் தெரிஞ்சி எடுத்து இருக்கா.. நான் இருக்க மட்டும் என் பேரன்ன நல்லா பாத்துப்பன். நீ போய் மாப்பிள்ளை கூட வாழு என சொல்லுகிறார்.


மறுபக்கம், ரோகிணியை காணவில்லை, எங்கே தேடுற என மூவரும் புலம்பிக் கொண்டு இருக்க, இறுதியில் வீட்டிற்கு செல்கிறார். வீட்டிற்கு சென்ற மனோஜ், விஜயாவிடம் அழுது புலம்பி எல்லாத்துக்கும் முத்து தான் காரணம் என பேச, போதும் என ரோகிணி உள்ளே இருந்து வருகிறார். இனி யாரும் என் புருஷன் பத்தி பேசக்கூடாது. அங்கிள், அண்டி மட்டும் தான் கேக்கணும் என ரோகிணி சொல்ல, அவர்களுக்கு உள்ளே வாக்குவாதம் தொடர்கிறது.




Advertisement

Advertisement