• May 21 2024

பரிதாப நிலைக்குச் சென்ற பெண்கள்... புரளி பேசும் போட்டியாளர்கள்.. கலவரமாக மாறும் பிக்பாஸ் வீடு..? வெளியானது இரண்டாவது ப்ரோமோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7-ஆனது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் முதல் ஷாப்பிங் ரீபிளேசிங் டாஸ்க் "வெயிட் பார்ட்டி' என்ற பெயரில் இடம்பெறுகின்றது. மேலும் இந்த டாஸ்க்கில் தோற்று விட்டால் மேக்அப் பொருட்கள் அனைத்தும் உங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டது.


இதனையடுத்து தற்போது 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் குறித்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தோற்றுவிடுகிறார்கள். இதனால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் பறிக்கப்படுவதோடு, மேக்கப் இல்லாமல் ஒருநாள் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது போல ப்ரோமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது.


அத்தோடு பெண்கள் அனைவரும் தங்களுடைய மேக்கப்பை நீக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தசமயத்தில் பிரதீப் ஆண்டனி மணி சந்திராவிடம் ஏதோ குறை கூறிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பூர்ணிமா ரவி "இந்த டாஸ்க்கில் தோற்பது நல்லது தான். ஏனென்றால் பெண்கள் தங்கள் மேக்கப்பை துறப்பீர்கள். உங்களுடைய அப்பாவியான முகம் வெளிப்படும். அது எனக்கு வாய்ப்பாக அமையும்" என பிரதீப் சொன்னதாக கூறுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement