• May 08 2024

சந்தானத்தின் படம் பார்க்க பாடையில் வந்த பிக் பாஸ் கூல் சுரேஷ்! மேள தாளத்துடன் அப்படியொரு என்ட்ரி??

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே பல நடிகர்களின் படங்கள் வெளியாகி, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1, விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்மஸ் ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களும் வெளியாகி வெற்றிநடை போடுகின்றன.


அதன்படி, இன்றைய தினம் வெளியான படங்களில் ஒன்று தான்  வடக்குப்பட்டி ராமசாமி. இதில், சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலமான கூல் சுரேஷ், தனது நண்பனும் நடிகரமான சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை பார்ப்பதற்காக பாடையில் வந்துள்ளார்.

அதாவது, வடக்குப்பட்டி ராமசாமி என்ற சந்தானத்தின் படத்தை பார்ப்பதற்காக, சந்தானத்தின் போட்டோவை கையில் வைத்துக் கொண்டு பாடையில் படுத்து கொண்டே வந்துள்ளார் கூல் சுரேஷ்.

இவ்வாறு அவர் மேல காலத்துடன் படம் பார்க்க வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement