தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு வசூல் மன்னனாக விளங்குபவர் தான் நடிகர் விஜய்.
ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இவர், தற்போது தனது 68-வது திரைப்படம் GOAT இல் நடித்து வருகிறார்.
இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் GOAT படத்தையும் தயாரிக்கிறது.

இந்த நிலையில், இன்றைய தினம் அதிகார்வப்பூர்வமாக அரசியலில் என்ட்ரி ஆகியுள்ளார் நடிகர் விஜய்.
இதை தொடர்ந்து, நடிகர் விஜயின் அரசியல் கட்சியின் பெயர், அறிக்கை, மாநாடு, திட்டம் என அடுத்தடுத்து அவை பற்றிய தகவல் வெளியாகிக் கொண்டுள்ளது.

இவ்வாறான நிலையில், நடிகர் விஜய் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், "ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்!" என தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட அவரின் ரசிகர்கள் பெரும் துயரில் மூழ்கி உள்ளனர்.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!