• Nov 02 2024

'நாளைய முதல்வர் எங்கள் தளபதி..' பகுத்தறிவு பாதையில் பயணத்தை தொடங்கிய நடிகர் விஜய்க்கு அமோக வரவேற்பு

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது, தனது அரசியல் பயணத்தை அதிரடியாக ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஓராண்டாகவே களப்பணியில் கவனம் செலுத்தி வந்த விஜய், அதற்காக மக்களை நேரில் சந்தித்து நிவாரணங்களையும், இளம் மாணவர்களை சந்தித்து கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளையும் செய்து வந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் தனது கட்சி ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாக கூறிய நடிகர் விஜய், நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.


நடிகை விஜய் அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள், மக்கள், கட்சி ஆட்கள் என பலரும் பட்டாசு கொளுத்தி அமோகமாக கொண்டாடி வருகிறார்கள். 

தற்போது சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் மற்றும் அவரது, அரசியல் பயணம் குறித்த பல தகவல்களும் வெளியாகிக் கொண்டுள்ளது.



Advertisement

Advertisement