• Sep 20 2024

பிக்பாஸ் போட்டியாளர்களை அசிங்கப்படுத்திய விஜய் டிவி.! அனைத்திற்கும் கிரியேட்டிவ் டீம் தான் காரணமாம்?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் எலிமினேட்டான போட்டியாளர்களை விட, பிக் பாஸ் நிகழ்ச்சியின் க்ரியேட்டிவ் டீம் தான் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

ஏனென்றால் பிக்பாஸ் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் ஜொலிக்காமல் இருப்பதற்கு எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் விஜய் டிவியின் அட்மின் தான் காரணம் என ஆச்சரியமான தகவலொன்று வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஆரம்பமாகி கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகிவிட்டது. வழமையாக பிக் பாஸ் சீசனின் பாதியில் தான் புது போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக உள்ளே செல்வார்கள். ஆனால் இந்த முறை போட்டியாளர்கள் தேர்வு கூட விமர்சிக்கப்பட்டது.


இதன் காரணமாக பிக் பாஸ் வரலாற்றில் ஒரே நேரத்தில் 5 பேர் உள்ளே அனுப்பப்பட்டு, யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் வினுஷாவின் எலிமினேஷன் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யுகேந்திரன் வெளியேறுவர் என்பது எதிர்பாராமல் நடந்த நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் டிவி எக்ஸ் தளத்தின் அட்மின் பை எனப் போட்டு ஒரு மிக்சர் படத்தினை பதிவிட்டார். இது யுகேந்திரன் மற்றும் வினுஷாவை  குறிப்பதாக இருந்தது. இதனால் கோவப்பட்ட ரசிகர்கள் உங்க போட்டியாளர்களை நீங்களே அசிங்கப்படுத்தலாமா? என கடுமையாக விமர்ச்சித்துள்ளனர்.


மேலும், இம்முறை பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் ஜொலிக்காமல் போனதற்கு காரணம் பிக்பாஸ் க்ரியேட்டிவ் டீம் தான். அவர்கள் இன்டெர்ஸ்ட் ஆன டாஸ்க் ஏதும் கொடுக்காமல் இருந்தால் அவர்களால் எப்படி விளையாட முடியும்? என ரசிகர்கள் மேலும் விமர்சித்துள்ளனர்.


இவ்வாறு விஜய் டிவி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவிற்கு பலரும் விமர்சித்து வந்ததால் குறித்த போஸ்ட் நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement