• Jan 15 2025

இந்தியன் தாத்தா லுக்கில் படம் பார்க்க வந்த பிக் பாஸ் பிரபலம்... வைரலாகும் புகைப்படம்...

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் இன்றைய தினம் வெளியான நிலையில், திரையரங்கிற்கு நடிகர் கூல் சுரேஷ் இந்தியன் தாத்தா போன்று வேடமிட்டு வருகை தந்திருந்தமை ரசிகர்களிடத்தில் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.  

நடிகர் கமல்ஹாசன், ஷங்கர், அனிருத், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் என ஒரு பெரிய நட்சத்திர கூட்டணியே இணைந்து மிக பிரமாண்டமாக வெளியான திரைப்படம் தான் ’இந்தியன் 2'. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.  


இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷ் இந்தியன் தாத்தா போன்று உடை அணிந்து கையில் இந்திய கொடியுடன் குதிரையில் திரையரங்குக்கு வருகை தந்திருந்தார். 


இதனை பார்த்த ரசிகர்கள் அவரை பார்த்து 'தாத்தா வாராரு கதறவிடப்போறாரு, வென்று தர போறாரு..' என்று கூறி ஆரவாரமாக அவரை வரவேற்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement