• Sep 20 2024

தமிழ் நாட்டில் மட்டும் இந்தியன் படத்தின் வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்தியன். கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் இன்றைய தினம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது.

இந்த நிலையில், 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் முதல் பாகம் சுமார் 61 கோடிக்கு மேல் வசூலித் இருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதன்படி, இந்தியன் படத்தின் முதலாம் பாகம் 53.7 கோடி ரூபாய் இந்திய அளவிலும், வெளிநாடுகளில் 7. 76 கோடியும் வசூலித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாம்.

இவ்வாறு இந்தியன் படத்தின் முதலாவது பாகம் அந்த காலங்களிலேயே சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் கோடிகளை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement