விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.ஆனால் இத் தொடரில் பல நாள் உண்மையை இன்னமும் வெளிக்கொணரவில்லை.இதனால் எப்போது இதை முடிப்பீர்கள் என்று ரசிகர்களே கேட்டு வருகிறார்கள்.
பிரவீன் பென்னட் இயக்கியிருக்கும் இந்த தொடர் மலையாளத்தில் வந்த கருத்தம்மா என்ற தொடரின் ரீமேக் ஆகும்.
ஆரம்பத்தில் தொடருக்கு என்னவோ பெரிய வரவேற்பு தான் கிடைத்தது, ஆனால் இடையில் சீரியலை நகர்த்த வேண்டுமென்றே ஏதேதோ விஷயங்களை உள்ளே புகுத்தி இயக்குநர் மக்களை வெறுக்க வைத்துவிட்டார்.
எனினும் இப்போது சில நாட்களாக வரும் தகவல் என்னவென்றால் விரைவில் சீரியலின் கிளைமேக்ஸ் வரும் என்பது தான். அந்த நாளுக்காக தான் பல நாட்களாக ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறுஇருக்கையில் தான் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் தம்பியாக நடிக்கும் அகீல் என்கிற சுகேஷுக்கு திருமணம் முடிந்துள்ளது. அவரது திருமண புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Listen News!