• Sep 14 2024

‘வாழை‘ என்னை உலுக்கி எடுத்துடுச்சு! அதிர்ச்சியூட்டும் வாழ்க்கை! நடிகர் ஆர்ஜே பாலாஜி விமர்சனம்...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குனர் மாரிசெல்வராஜின் வாழை திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் மாரி செல்வராஜ்.


இவருடைய சிறு வயதில் ஏற்பட்ட உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு தான் வாழை படம் உருவாகியுள்ளது. முதல் நாளில் இருந்த விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வாழை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


இந்நிலையில் இத்திரைப்படத்தினை பலரும் பாராட்டும் நிலையில் தற்போது நடிகர் ஆர்ஜே பாலாஜி ‘வாழை‘ என்னை உலுக்கி எடுத்துடுச்சு. அதிர்ச்சியூட்டும் ஒரு வாழ்க்கையை படமாக தந்துள்ளார். இந்த அதிர்ச்சியிலிருந்து வெளியேற எனக்கு இன்னும் சில நாட்களாகலாம். எதிர் பார்த்து வந்தது ஒன்னு ஆனால் அங்கு நடந்தது ஒன்று. படம் ரொம்ப நல்லா இருக்கு என்று கூறியுள்ளார். 




Advertisement

Advertisement