• Apr 16 2026

ஈஸ்வரியின் பேச்சை மீறிய பாக்கியா, ராதிகா போட்ட முக்கிய கன்டிஷன்- குழப்பத்தில் கோபி- Baakiyalakshmi Serial

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கெண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியாவிடம் ஒருவர் வந்த கான்ராக்டை மாற்றித் தருமாறு சொல்கின்றார். இதனால் ஈஸ்வரி பாக்கியாவை தனியாக அழைத்து கான்டாக்டை மாற்றித் தருகின்றேன் என்று சொல்லு எனச் சொல்ல, பாக்கியா வெளியில் வந்து கான்ராக்டை மாற்றித் தரமுடியாது என்று சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சியடைகின்றார்.


தொடர்ந்து பாக்கியா, எழில், ராமமூர்த்தி ,அமிர்தா எல்லோரும் பொருட்காட்சி நடக்கவுள்ள இடத்திற்குச் சென்று பார்வையிடுகின்றனர். பாக்கியாவின் முன்னேற்றத்தை எழிலிடம் சொல்லி ராமமூர்த்தி பாராட்டுகின்றார். பின்னர் பாக்கியா தனது வேலையாட்களுடன் சேர்ந்து எல்லாவற்றையும் ரெடி பண்ணுகின்றார்.

பின்னர் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து ராதிகா என்ன சமைச்சாள் என்று தெரியலையே என்று புலம்பிய படி ராதிகாவிடம் கேட்க அவர் ஓட்ஸ் சமைத்து வைத்திருக்கிறேன் என்று சொல்கின்றார். இதைக் கேட்ட கோபி அதிர்ச்சியடைகின்றார். இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் நடிக்கின்றார்.


அப்போது பாக்கியா எல்லோரும் தன்னுடைய பொருட்கண்காட்சிக்கு வரணும் என்று சொல்ல,ராதிகா தானும் வரவேணுமா என்று கேட்க பாக்கியா எல்லோருக்கும் தான் என்கின்றார். இதைக் கேட்ட கோபி ராதிகாவிடம் எதுக்கு நீ பாக்கியாவுக்கு சர்ப்போட் பண்ணிட்டு இருக்கிற என்று திட்டுகின்றார்.

அதற்கு ராதிகா நம்ம வீட்டுக்கு போகும் வரைக்கும் இங்க எதுவும் தப்பாக நடந்தால் நான் கேட்பேன் என்று சொல்கின்றார். இதைக் கேட்டு கோபி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement