• Jan 19 2025

வீட்டில் பழனிச்சாமியுடன் சிரித்து சிரித்து பேசும் பாக்கியா- கண்டபாட்டுக்கு கத்திய கோபி- ஈஸ்வரி கொடுத்த அதிர்ச்சி-Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்று பார்ப்போம்.

கடும் மழை பெய்து கொண்டிருப்பதால் ஈஸ்வரி பொருட்காட்சி கான்டாக்டை வாங்கிய நபருக்கே கொடுத்து விடும்படி கூறுகின்றார். அத்தோடு இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை என்றெல்லாம் கண்டபடி திட்டுகின்றனர். இதனால் பாக்கியா என்ன செய்வதொன்று குழப்பத்தில் இருக்கின்றார்.


அத்தோடு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் பொருட்காட்சி கண்காட்சி நாளை நிறுத்தப்படுவதாக செய்தியில் சொல்வதைப் பார்த்த எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.அப்போது ஈஸ்வரி உன்னால ஒரு லட்சத்து அறுபதாயிரம் பணம் தான் வீணாகப் போச்சு உனக்கு இது தேவையா என கண்டபாட்டுக்கு திட்டுகின்றார்.

இதனால் பாக்கியா எதுவும் சொல்லாமல் இருக்க கோபியும் பாக்கியாவை திட்டுகின்றார். ராதிகா இது உங்களுக்கு தேவையில்லாத வேலை அவங்க பிரச்சினையை அவங்களே பார்த்துப்பாங்க, மேல வாங்க எனக் கூட்டிக் கொண்டு போகின்றார். தொடர்ந்து ஈஸ்வரி திட்ட பாக்கியாவும் எதுவும் சொல்லாமல் கிளம்பிப் போகின்றார்.


விடிந்ததும் பாக்கியா தன்னுடன் கான்டீனில் வேலை செய்பவர்களுக்கு போன் பண்ணி பாக்கியா ஆறுதல் சொல்ல ங்கு வரும் ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி அங்கு ஒரு கொண்டாட்ட வீட்டுககு போவதாகச் சொல்லி கிளம்புகின்றனர். அதே போல அமிர்தாவும் எழிலும் கான்டாக்ட் விஷயமாக வெளியில் செல்கின்றனர்.

பின்னர் செழியன் மட்டும் வீட்டில் இருந்து வேலை செய்ய அங்கு பழனிச்சாமி வர பாக்கியா அவருக்கு டீ போட்டுக் கொடுக்கின்றார். அந்த நேரம் செழியன் எழும்பி உள்ளே போனதும் கண்ககாட்சி நடக்குமுங்க என பழனிச்சாமிக்கு ஆறுதல் சொல்லி பேச அங்கு வரும் கோபி எல்லோரையும் கூப்பிட்டு பார்க்கின்றார்.


பின்னர் செழியன் மட்டும் வீட்டில் இருந்து வேலை செய்ய அங்கு பழனிச்சாமி வர பாக்கியா அவருக்கு டீ போட்டுக் கொடுக்கின்றார். அந்த நேரம் செழியன் எழும்பி உள்ளே போனதும்  கண்ககாட்சி நடக்குமுங்க என பழனிச்சாமிக்கு ஆறுதல் சொல்லி பேச அங்கு வரும் கோபி எல்லோரையும் கூப்பிட்டு பார்க்கின்றார்

வீட்டில் யாரும் இல்லாததல் பழனிச்சாமியுடன் லுாட்டி அடிக்கிறியா என பாக்கியாவைத் திட்டுகின்றார். இதனால் பாக்கியாவும் திரும்ப கத்துகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷொட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement