• May 03 2024

'அயோத்தி' நடிகைக்கு அடுத்தடுத்து அடித்த ஜாக்பாட்.. தமிழில் 2 படங்களில் கமிட்டெட்? ஹீரோஸ் யாரு தெரியுமா?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்ற நாடகத்தில் நடித்து பிரபலமானவர் தான் ப்ரீத்தி அஸ்ராணி. இவர் குஜராத்தில் பிறந்து வளர்ந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழில் வெளியான அயோத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார் ப்ரீத்தி அஸ்ராணி.

சிறு வயது முதலே நடிக்கத் தொடங்கிய ப்ரீத்தி அஸ்ராணி, தெலுங்கு மொழிகளில் குறும்படங்களிலும் வெள்ளித்திரைப் படங்களிலும் நடித்து வந்தார். தமிழில் அவருக்கு கிடைத்த அயோத்தி திரைப்படம் தான் அவருக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த முதல் வாய்ப்பாக காணப்படுகிறது.


இந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு நடிகர்களுடன் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் ப்ரீத்தி அஸ்ராணி. அந்தப் படத்தின் படப்பிடிப்பு 90% நிறைவடைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


அதன்படி நடிகர் கவின் உடன் ஒரு படத்தில் நடிப்பதற்கு கம்மிட் ஆகியுள்ள ப்ரீத்தி அஸ்ராணி. இதையடுத்து, விஜய் டிவியில் பிரபலமாகி தற்போது ஹீரோவாக நடித்து வரும் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகும் மற்றொரு திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதனை அண்மையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement